fbpx

ஆசிரியர்களே இன்று முதல் தமிழ்நாடு முழுவதும்..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே 15 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு அரசு பள்ளிப் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று மே 24ஆம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு மே 25ஆம் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26 ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 29ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு...! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு...! உடனே பதிவு பண்ணுங்க...!

Wed May 24 , 2023
தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8-ம்‌ வகுப்பு அல்லது 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skillstraining.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ இன்று முதல்‌ 07.06.2023 […]

You May Like