தமிழ்நாட்டில் மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும். அக்கம்பக்கத்தினர் உடன் தேவையில்லாமல் பேசக்கூடாது. சரியான நேரத்திற்கு வர வேண்டும். அடிக்கடி வெளியே செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.