fbpx

செக்…! ஆசிரியர்கள் இது போன்று பாடம் நடத்த கூடாது…! பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுடன் 4, 5-ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது எனவும், ஈராசிரியர் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும் 4,5-ம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும்.

அதே போன்று 3 அல்லது 4 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். மேலும் போதிய ஆசிரியர்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாவ்...! தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு ரூ.10,000 + சான்றிதழ்...! உடனே பதிவு செய்ய வேண்டும்...!

Fri Jun 23 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, பேச்சுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களிடையே தமிழில்‌ படைப்பாற்றலையும்‌, பேச்சாற்றலையும்‌ வளர்க்கும்‌ நோக்கில்‌ ஆண்டுதோறும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, […]

You May Like