உலக கோப்பை டி20 தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அடிலைடில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகின்றது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
இப்போட்டியில் முதலில் நெதர்லாந்து பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடியது. தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக பந்து வீசு அமையவில்லை. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. போட்டியில் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி புள்ளகிள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.