இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தடுப்பு சுவர் மீது ரிஷப் பந்த் கார் மோதியது. இந்த விபத்தை அடுத்து கார் தீப்பிடித்து எரிந்தது. தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.