fbpx

“Will You Marry Me?” தங்கம் வென்ற வீராங்கணைக்கு ப்ரபோஸ் செய்த சக வீரர்.. ஒலிம்பிக்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!!

களைகட்டி வரும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரிடம், அவரது காதலர் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யாகியாங். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், நேற்று நடைபெற்ற போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவிற்கு தங்கப் பதக்கத்தைத் தேடித் தந்தார். அந்தப் பதக்கத்துடன் மேடையில் தோன்றியவரிடம் அவரது காதலரான லியு யுசென், ப்ரபோஸ் செய்தார். தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மோதிரத்தை எடுத்து மண்டியிட்டப்படியே ஹுவாங்கிடம், திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹுவாங் யாகியாங் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனார். பின்னர் அவரும் ஆனந்தக் கண்ணீருடன் ‘ஆம்’ எனப் பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதே ஒலிம்பிக் தொடரில் ஹுவாங்கின் காதலரான லியு யுசென்னும் பங்கேற்றிருந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட அவர், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more ; குறைந்த விலையில் பல அம்சங்களுடன் கூடிய iQoo Z9 Lite 5G மொபைல் அறிமுகம்..!!

English Summary

Teammate who proposed to the gold winning player

Next Post

Wayanad Landslide | பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும்..!! - கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி

Sat Aug 3 , 2024
Karnataka CM Siddaramaiah To Construct 100 Houses For Victims Affected By Wayanad Landslide

You May Like