தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்குள்ள லா பிளாட்டா என்ற இடத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது குழந்தைகளை காரில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய ஆண் நண்பரை சந்திக்கும் சூழல் ஏற்பட்டதும், அவரை காருக்குள் அழைத்து அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். காரின் கதவை அந்த பெண் அடைத்திருந்தார். இதனால் வெளியே நின்று கொண்டிருந்த அவரது பிள்ளைகளால் காருக்குள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டது.
வெளியே நின்ற பிள்ளைகள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறும், கதவை திறக்குமாறும் கெஞ்சிக் கொண்டிருந்தனர். இதனை பொருட்படுத்தாமல், அந்த இளம்பெண் தனது காதலுடன் உறவில் ஈடுபட்டிருந்தார். இதுதொடர்பான காட்சியை பூங்காவில் இருந்த நபர் ஒருவர் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் வெளியிட, அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
குறிப்பாக அந்த இளம்பெண்ணின் மகள் உயரமாக இருந்ததால் கார் கண்ணாடி வழியே உள்ளே நடந்த காட்சிகளை பார்த்துள்ளார். இந்த காட்சிகளை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் அந்த ஜோடியை கைது செய்தனர். பிள்ளைகள் 2 பேரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.