fbpx

டெலிகிராம் CEO டிஎன்ஏ-வில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்..!! அவரே சொன்ன விஷயம்!!

Telegram நிறுவனர் மற்றும் CEO Pavel Durov சமீபத்தில் 12 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகள் இருப்பதாக வெளிப்படுத்தினார். இந்த விஷயத்தை டெலிகிராமில் தனது 5.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் பகிர்ந்து கொண்டார். திருமணமாகாத மற்றும் தனியாக வாழ்ந்து வரும் ஒருவருக்கு இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பவெல் டுரொவ், “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோளுடன் வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் கருவுறுதல் பிரச்சினை காரணமாக குழந்தை பிறக்க முடியவில்லை, மேலும் அவர்கள் குழந்தையைப் பெறுவதற்காக ஒரு கிளினிக்கில் விந்தணு தானம் செய்யும்படி என்னிடம் கேட்டார். அவர் கூறுகையில் அப்போது நான் சிரித்தேன்.

தொடர்ந்து வலியுறுத்தியதால் அவர் சொன்ன க்ளீனிக் சென்றேன். விந்தணுக்கள் உலகெங்கிலும் உள்ள தம்பதிகளுக்கு உதவக்கூடும் என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து விந்தணு தானம் செய்தேன். எனது நன்கொடை 12 நாடுகளில் 100 தம்பதிகளுக்கு குழந்தைகளை கருத்தரிக்க உதவியது எனக் கூறினார்.

தொடர்ந்து, விந்தணு தானம் பற்றிய முக்கியதுவத்தை எடுத்துக் கூறி, ஆரோக்கியமான ஆண்களை நன்கொடை வழங்க்க ஊக்கப்படுத்தவும் நான் விரும்புகிறேன், இதனால் குழந்தைகளைப் பெறப் போராடும் குடும்பங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார்.

Read more ; கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி எத்தனை முறை செய்தியாளர் சந்திப்பில் பேசினார்? வரலாறு ஒரு பார்வை!!

English Summary

Telegram CEO Pavel Durov Reveals He Has Over 100 ‘Biological Kids’, But HOW

Next Post

அடுத்த அதிர்ச்சி..!! கர்நாடகாவிலும் பயங்கர நிலச்சரிவு..!! நிலவரம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Tue Jul 30 , 2024
At present, such a huge landslide has also caused a stir in Karnataka.

You May Like