20 ஆண்டு கால திரை வாழ்க்கையில் தென்ந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. பெங்களூரைச் சேர்ந்த நடிகை சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்ற நிலையில், தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கினார்.
90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சௌந்தர்யா. அவர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தடம் பதித்தார்.
1993-ம் ஆண்டு பொன்னுமணி படத்தின் மூலம் சௌந்தர்யா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சௌந்தர்யாவுக்கு தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக மாறினார். ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களு ஜோடி சேர்ந்து நடித்த ரசிகர்களை கவர்ந்தார். அவர் நடித்த தவசி, சொக்கத்தங்கம், அருணாச்சலம், படையப்பா, சேனாதிபதி, போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா 2004-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார்.. 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி, தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க தனது சகோதரர் அமர்நாத்துடன் விமானத்தில் பயணம் செய்தார். ஆனால் அந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் சௌந்தர்யாவும், அவரின் சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் அப்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும் உயிரிழந்தார்.
சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தெலுங்கு மூத்த நடிகர் மோகன் பாபு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு மோகன் பாபு பாபு தான் காரணம் என்று சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கம்மம் மாவட்டம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் அந்த ஆர்வலர், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, ஏதேனும் மோசடி நடந்ததா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று காவல்துறையை அணுகியுள்ளார். மஞ்சு மோகன் பாபு தன்னை ‘மிரட்டல்’ செய்ததாகவும், தனக்கு உயிர் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கடிதத்தில், மோகன் பாபு ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் உள்ள 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை விற்குமாறு மறைந்த நடிகர் சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், அதற்கு அவரது சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லேபள்ளியில் உள்ள விருந்தினர் மாளிகையை மோகன் பாபு பயன்படுத்தி வந்ததாக புகார்தாரர் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் சொத்தை கையகப்படுத்த வேண்டும், நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மோகன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
மேலும், விருந்தினர் மாளிகையை அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். பல தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான மோகன் பாபு, இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
Read More : இந்தியாவிலேயே, மிக அதிகமாக சம்பளம் பெற்ற சின்னத்திரை நடிகை இவர் தான்.. சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?