தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும். வருகிற 28ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கக்கூடும். 18 மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.