கோயில் பூசாரி ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நரசிம்மர் கோயில் பூசாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ராம் சங்கர் தாஸ் (28) என்பவர் தற்கொலை செய்துகொண்டதை முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். காவல்துறை துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். லைவ் வீடியோவில், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட்டின் பொறுப்பாளர் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள் மீது ராம் சங்கர் தாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால், கோட்வாலி காவல்நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மனோஜ் சர்மா, இறந்த பூசாரி முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். அவர் போதைக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என்று அவர் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோயிலில் ‘ராம் ஷரண் தாஸ்’ என்ற வயதான பூசாரி காணாமல் போனது தொடர்பாக ‘ராம் சங்கர் தாஸ்’ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் ராம் சரண் தாஸ் (80) இந்த ஆண்டு ஜனவரி முதல் காணவில்லை என்று செய்தி வெளியிடப்பட்ட நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.