fbpx

இடிபாடுகளில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – துருக்கி பூகம்பத்தின் நெஞ்சை உறைய வைக்கும் காட்சி!

துருக்கி மற்றும்  சிரியாவின் எல்லை பகுதிகளை  மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை  மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள  இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப்  பகுதி எங்கும்   கட்டப்பட்டிருந்த வானுயர்ந்த கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் என பல அடுக்குமாடி குடியிருப்புகள்  நில அதிர்வினால் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி மரணமடைந்த மற்றும் காயம் பட்டோர் என ஏராளமானோர் கடந்த தினங்களாக மீட்கப்பட்டு வருகின்றனர். எந்தப் பக்கம் திரும்பினாலும் இப்பகுதிகளில் மரண ஓலங்களும்  பிணக்குவியல்களும் கதறல்களும் என நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளே  வியாபித்திருக்கின்றன. பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இந்தியா உட்பட 12 நாடுகளைச் சார்ந்த ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்  மீட்புப் பணிகளை 24 மணி நேரமும் இடைவிடாது தொடர்ந்து வருகின்றனர்.

இங்குள்ள கட்டிட இடுப்பாடிகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதால்  மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் துருக்கி நாட்டின் சமந்தாக்  நகரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பவர்களை மீட்கும்படி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது ஒரு கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கியிருந்த பிறந்து பத்து நாட்களை ஆனா பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ளவர்களையும்  மனம் நெகிழச் செய்திருக்கிறது . இந்தக் குழந்தையும் தாயும் கடந்த 90 மணி நேரங்களாக இடுப்பாடுகளுக்குள் உயிருடன் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து  நாட்களே ஆன குழந்தையின் தாயார் மற்றும் மூன்று வயது சிறுவன் உட்பட அந்தக் குழந்தை ஆகிய மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவுடன் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தீவிரமாக மீட்டுப் பணியில் ஈடுபட்டு வரும் மீட்பு குழுவினர்  இன்னொரு கட்டிட இடுப்பாடு களுக்கிடையே சிக்கியிருந்த 66 வயது  முதியவர் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். இதுபோன்ற மீட்பு பணிகள்  மீட்பு குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன . அவர்கள் இன்னும் நிறைய உயிர்களை காக்க  தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள்  உற்சாகம் அளிப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். ஆனாலும் இந்த கொடூர புகம்பத்திற்கு இதுவரை  24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது மிகவும் வருத்தமான செய்தி.

Baskar

Next Post

ஹெலிகாப்டரில் மணமக்கள் ஊர்வலம்! நனவானது தாத்தாவின் கனவு!

Sat Feb 11 , 2023
என்னதான் காலங்கள் நவீனமாக மாறினாலும் சில பாரம்பரிய பழக்கங்கள் தொன்று தொட்டு நடந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருமண சடங்குகளும். குறிப்பாக பண்டைய காலங்களில்  திருமண ஊர்வலத்தின் போது திருமண தம்பதிகளை குதிரைகளின் மேல் ஏற்றி நகர்வலம் வருவது வழக்கம் தகவல் தொழில் நுட்பங்களால் உலகம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் இந்தப் பாரம்பரிய பழக்கங்கள் என்றும் மாறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த […]

You May Like