தமிழ்நாடு அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தென்காசியில் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு ஐந்து காலியிடங்களும் என மொத்தம் 15 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளில் சேர்வதற்கு உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். மேலும் மெடிக்கல் ஆபீசர் பணிகளுக்கான கல்வி தகுதியாக எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது விலங்கியல் பாடப்பிரிவுகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை தாய் மொழியாக கொண்டு படித்திருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெடிக்கல் ஆபீஸ் பணிக்கான ஊதியமாக 60 ஆயிரம் ரூபாயும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஊதியமாக 14 ஆயிரம் ரூபாயும் மருத்துவப் பணியாளர் பணிக்கு ஊதியமாக 8,500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பணிகள் யாவும் தற்காலிகமானவையே. இவை நிரந்தரம் செய்யப்பட மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 18 2 2023 தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை அறிய https://tenkasi.nic.in/ இணையதளத்தை கிளிக் செய்யவும்.