Syria: சிரியாவின் கடலோரப் பகுதிகளில் அரசாங்கப் படைகளுடனான மோதல்களில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் பஷார் அசாத்தின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். தப்பியோடிய ஆசாத் ரஷியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபர் ஆசாத் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வன்முறை வெடித்துள்ளது. அங்கு மலைப்பாங்கான கடலோர கிராம பகுதியில் துப்பாக்கிகளுடன் கூடியிருந்த அசாத் விசுவாசிகளை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் முயன்றனர். அப்போது நடந்த மோதல்களில் 200 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) இதை உறுதிப்படுத்தி உள்ளது.
இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர். படுகாயமடிந்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசுவாசிகள், ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
Readmore: அடேங்கப்பா!. முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநரின் ஆண்டு சம்பளம் ரூ.48 லட்சமா?.