fbpx

பயங்கரம்!… உடல்கருகி 29 பேர் பலி!… கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் சோகம்!

Turkey: துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி இஸ்தான்புல் அருகே பெசிக்டஸ் நகரில் பாரம்பரிய சின்னங்கள், பண்பாட்டு மையங்கள், சர்வதேச பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை உள்ளன. இந்தநிலையில் அங்குள்ள 16 மாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இரவுநேர மதுபான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டு பணியாளர்கள் மற்றும் வேலை செய்து கொண்டு வந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விறு விறுவென அங்கு இருந்த மதுபானங்களால் பற்றி எரிய தொடங்கியது. இதன் காரணமாக வேகமாக அந்த கேளிக்கை விடுதியின் முழுவதுமே தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைவாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை கொடுத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இருப்பினும், தீ மதுபானத்தில் பட்டு எரிந்ததால் தீயணைப்பதற்குள் அந்த கேளிக்கை முழுவதுமே தீயினால் இருந்தது. இந்த தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைப்போல, இந்த விபத்தில் 8 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் மிகவும் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் ஆபத்தானநிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கேளிக்கை விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Readmore: 34 ஆண்டுகால பயணம் முடிவு!… 91 வயதில் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்!

Kokila

Next Post

’என்ன செய்றது எல்லாம் பழக்கதோஷம்’..!! இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Wed Apr 3 , 2024
ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ பெரியோர்களே தாய்மார்களே உங்களது பொன்னான வாக்குகளை வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு” என்று தெரிவித்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “என்ன செய்வது பழக்கதோஷம்” என்றும் கூறினார். அதிமுகவில் […]

You May Like