பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர், ஜலாலாபாத்தில் நடைபெறும் திருமணத்திற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். அபோஒது, கொல்காமவுர் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் வேனில் இருந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவருக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான சிகிச்சை செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு, இறந்தவர்களின் சடலங்களையும், படுகாயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.