fbpx

கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்..!! பூகம்பத்திற்கு ஆளாகும் 90% பகுதிகள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ”இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் பதிவாகவில்லை. அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்” என்று சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ரோடோல்போ கார்சியா தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கவுதமாலாவின் 90% பகுதிகள் பூகம்பத்திற்கு ஆளாகின்றன என கூறப்படுகிறது.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே..!! டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் இனி கவலைப்படாதீங்க..!! சூப்பர் வசதி..!!

Sat Jan 27 , 2024
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். வாகன பதிவு தொடர்பாக, மொத்தம் 42 சேவைகளை தமிழக இணைய வழியில் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு கடந்தாண்டு அறிவித்தது. அந்த வகையில், போக்குவரத்து அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் பொதுமக்கள் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்பதால் பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். டிரைவிங் லைசென்ஸ் பெற்ற […]

You May Like