சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், தற்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பற்றிய உடன் அருகில் உள்ள தனியார் பள்ளி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், மக்கள் பலரும் சுவாச கோளாறு, கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புத்துறையினர், ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின் கசிவு காரணமாக தீபத்து ஏற்பட்டதா..? அல்லது கவனக்குறைவால் ஏற்பட்டதா..? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ’உங்களை நம்பி தான வந்தோம்’..!! கணவரை கட்டிப்போட்டு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர்கள்..!!