fbpx

அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து..!! 40 பேர் உடல் கருகி பலியான சோகம்..!!

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும்போது அவர்களை மெக்சிகோ பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து தடுப்பு காவல் முகாம்களில் அடைத்து வைக்கின்றனர். அமெரிக்காவிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அனுமதி கிடைக்காதவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Chella

Next Post

குரூப் 4 தேர்வு முடிவு சர்ச்சை..!! இன்று முக்கிய ஆலோசனை..!! முக்கிய அறிவிப்பு வெளியாகுமா..?

Wed Mar 29 , 2023
கடந்த வாரம் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சரியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவில்லை என்றும், தேர்வெழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடுகள் காரணமாக குறிப்பிட்ட சில மையங்களில் அதிகம் பேர் தேர்வு பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

You May Like