fbpx

85 பயணிகளுடன் விபத்தில் சிக்கிய Boeing 737 விமானம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! செனகல் நாட்டில் பயங்கரம்.!!

செனகல் நாட்டிற்கு சொந்தமான Boeing 737 செனகல் ஏர் விமானம் அந்நாட்டின் தலைநகரான டக்கரில் உள்ள விமான நிலையத்தின் பாதையில் இருந்து விலகி விபத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செனகல் நாட்டின் தலைநகர் டக்கரில் இருந்து 79 பயணிகள் இரண்டு விமானிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பமாகோ நகருக்கு புறப்பட்டு சென்ற Boeing 737 விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் எல் மாலிக் என்டியாயே தெரிவித்துள்ளார்.

டிரான்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் ஏர் செனகல் விமானம் புதன்கிழமை பின்னேரம் விபத்திற்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் விமானத்தில் பயணம் செய்த மற்ற நபர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More: கீல்வாதம் நோயை 8 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்.!! மருத்துவத்துறையில் புதிய சாதனை.!!

English Summary

Senegal’s Air Sénégal flight skids off runway with injuries; probe underway at Blaise Diagne airport. A Boeing 737 aircraft, carrying 85 passengers, skidded off the runway at Dakar’s airport, according to a statement from Senegal’s transport minister, AP reported. Ten people were injured in the mishap.

Next Post

100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்ற 'ஜலேபி பாபா' சிறையில் மரணம்!

Thu May 9 , 2024
ஹிசார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஜலேபி பாபா என்ற அமர்புரி சிறையில் உயிரிழந்தார். போதை கலந்த டீயை கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன்பு தோஹானாவில் ஜிலேபி விற்பனையாளராகப் பணிபுரிந்த அவர், பின்னர் ‘பாபா’வாகி ஆசிரமம் கட்டினார். அக்டோபர் 2017 இல், தோஹானாவில் அமைந்துள்ள ‘ஜலேபி பாபாவின் ஆசிரமத்தில் பெண் பக்தர்களின் ஆட்சேபகரமான வீடியோக்கள் வெளிவந்ததை […]

You May Like