Accident: காங்கயம் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் (60), சித்ரா (57) தம்பதியினர் தங்களது 60வது திருமண நாள் கொண்டாட்டத்திற்காக காரில் குடும்பத்துடன் திருக்கடையூர் சென்றுள்ளனர். இதையடுத்து, இன்று அதிகாலை சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, காங்கயம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சந்திரசேகர், சித்ரா, இளவரசன் (26), அரிவித்ரா (30), மற்றும் மூன்று மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளகோவில் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: Post Office: நாளை நடைபெறும் கோட்ட அளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்…!