fbpx

நள்ளிரவில் பயங்கரம்!… தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!… 2 பேர் காயம்!

Terrorist Attack: ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில்யான்னர் என்ற இடத்தில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் மீது சனிக்கிழமை (நேற்று இரவு) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஃபர்ஹா மற்றும் அவரது மனைவி தப்ரேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் ராஜஸ்தானின் ஜபியூரில் வசிப்பவர்கள். தகவலறிந்து விரைந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, காயமடைந்த தம்பதியினரை மீட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதேபோல் ஷோபியான் மாவட்டம் நேற்று இரவு 10.30 மணி அளவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பாரமுல்லாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரமுல்லாவில் ஐந்தாவது கட்டமாக நாளை ( மே 20-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஸ்ரீநகரில் வரலாறு காணாத வாக்குப்பதிவைத் தொடர்ந்து, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore: தேர்தல் ஆணையத்திற்கு வந்த 4.24 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள்…!

Kokila

Next Post

இந்த உணவுகள் ரொம்ப ஆபத்து!! ஹைபர் டென்ஷன் உள்ளவங்க தயவு செய்து சாப்பிடாதீங்க!!

Sun May 19 , 2024
ஹைபர் டென்ஷன் (உயர் ரத்த அழுத்தம்) உச்சநிலைக்கு செல்லும் வரை பலரும் கண்டுகொள்வதே இல்லை. இதன் விளைவுகள் மிக மோசமானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஹைபர் டென்ஷன் உண்டாவதற்கு முக்கியக் காரணமே நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் மன அழுத்தம் உள்ளிட்டவையும் தான். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணி நம்முடைய உணவுப் பழக்கங்கள்தான். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சில ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதிலும் ஏற்கனவே சில […]

You May Like