fbpx

கொடுமை..!! சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பி வைத்த மாணவர்கள்..!! கட்டை கம்புடன் கிளம்பிய கிராம மக்கள்..!!

சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் மாணவர்கள் சிலர் சிறுநீரை நிரப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள், வேற்று சமூகத்தை சேர்ந்த சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். அதுமட்டும் இன்றி அந்த மாணவியின் பேக்கில் காதல் கடிதத்தையும் மாணவர்கள் சிலர் வைத்துள்ளனர். இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த கிராம மக்கள், கையில் கம்பு கட்டைகளை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது போலீசார் மீதும் அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி களேபரமானது. கையில் கம்புகளை வைத்துக் கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதும், போலீசார் அவர்களை கலைக்க முயற்சிப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவியின் பாட்டிலில் சக மாணவர்களே சிறுநீரை கலந்து வைத்த விவகாரம் ராஜஸ்தானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:- “மாணவி மதிய உணவுக்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பையை வகுப்பறையிலேயே வைத்து விட்டு சென்றிருக்கிறார். சாப்பிட்டு முடிந்த பிறகு வகுப்பறைக்கு வந்த மாணவி தனது பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் என நினைத்துக் குடித்திருக்கிறார். அப்போதுதான் வித்தியாசமான வாடை வந்துள்ளது. அதன்பிறகே சில மாணவர்கள், தண்ணீரில் சிறுநீரை கலந்து வைத்தது தெரிந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன மாணவி, பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், திங்கட்கிழமை பள்ளி திறந்ததும் காவல் நிலையத்தில் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த கிராம மக்கள், மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

குப்பைத் தொட்டியை சூழ்ந்து நின்ற தெரு நாய்கள்..!! பக்கத்துல போய் பாத்தா..!! தலை இல்லாமல் கிடந்த பெண் குழந்தைகளின் உடல்..!!

Tue Aug 1 , 2023
குறை பிரசவத்தில் பிறந்து உயிரிழந்த இரண்டு பெண் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே மாநகராட்சி குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சூழ்ந்து நின்றது. அங்கு நாய்கள் எதையோ கடித்து குதறி கொண்டிருந்தது. அப்போது குப்பை அள்ளுவதற்காக அங்கு சென்ற தூய்மை பணியாளர்கள், காயங்களுடன் இரண்டு பெண் குழந்தைகளின் உடல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரு […]

You May Like