ஜம்மு-காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்று விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட தகவல்களின்படி, ஷிவ் கோரி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமத்தில் தாக்குதலுக்கு உள்ளானது என்று PIT செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷேஷ் மகாஜன் உறுதி செய்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் மீட்புப் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பேருந்து பல அடிகள் கீழே சாலைக்கு கீழே கிடப்பது போன்றும், சம்பவ இடத்தில் மக்கள் கூட்டம் கூடியிருப்பதும் தெரிகிறது.மேலும் பேருந்து கவிழ்ந்த போது, அதில் பயணம் செய்த பக்தர்கள் பெரிய பாறைகள் மீது தூக்கி வீசப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் இறந்தவர்களில் ஆண்களும் பெண்களும் அடங்குவர்.
Read More: நீங்கள் அதிக நேரம் காரில் பயணிப்பவரா..? புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!