fbpx

கோவை கோர்ட் வளாகத்தில் பயங்கரம்..!! பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை..!! பதைபதைக்கும் வீடியோ..!!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று 2 இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25) என்பதும், காயமடைந்தவர் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் நீதிமன்ற விசாரணைக்காக அங்கு வந்துள்ளனர். உயிரிழந்த கோகுல் தன் உடலில் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. பட்டப் பகலில், மக்கள் முன்னிலையில் இரண்டு இளைஞர்களைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 5 தனிப்படை போலீஸ் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Chella

Next Post

'பிரேக்' உடைந்ததால் வாணியம்பாடியில் நின்ற தன்பாத் ரயில்!

Mon Feb 13 , 2023
சென்னை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்க்கு செல்ல இருந்த ரயில் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் ரயில்வே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதையில் செல்ல வேண்டிய ஏராளமான ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு செல்ல வேண்டிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 4 மணி அளவில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது இந்த ரயிலின் ஆறாவது […]

You May Like