fbpx

பரபரப்பு..! காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு… 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் மலைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு நேற்று உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டன. ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உணவு வகைகளை வாகனத்தில் எடுத்து சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக 3 ராணுவ வீரர்களும் உடன் சென்றனர். அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 2 சுமை தூக்கும் தொழிலாளிகள் மற்றும் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

வெளிமாநில தொழிலாளி கொலை காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று காலை வெளிமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேற்குவங்கத்தை சேர்ந்த அவர் கடந்த சில மாதங்களாக ஸ்ரீநகரில் பணியாற்றி வந்தார். கடந்த 20-ம் தேதி காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

English Summary

Terrorist firing in Kashmir… 3 soldiers killed

Vignesh

Next Post

யார் இந்த சஞ்சீவ் கண்ணா?. சட்டப்பிரிவு 370 முதல் EVM வரை!. நாட்டின் 51வது தலைமை நீதிபதியாக நியமனம்!. முக்கிய தீர்ப்புகள் இதோ!

Fri Oct 25 , 2024
President notifies appointment of Justice Sanjiv Khanna as next Chief Justice of India

You May Like