Terrorist Attack: காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு மையம் அருகே பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 2 இடங்களில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் எல்லையோர மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவி வருகின்றனர். அவ்வாறு இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுபிடிக்கின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன் தினம் 2 இடங்களில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அனந்த்நாக் மாவட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஸ்ரீநகரில் உள்ள கன்யார் என்ற இடத்திலும் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள், 2 போலீசார் காயமடைந்தனர்.
இந்தநிலையில், காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு மையம் அருகே ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா தளபதி உஸ்மான் லஷ்கரி என்று காவல்துறை அடையாளம் கண்டு கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பதிவில், “கடந்த சில நாட்களாக பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் தாக்குதல்கள் மற்றும் என்கவுண்டர்களின் தலைப்புச் செய்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் கடைக்காரர்கள் மீது இன்று கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
Readmore: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா..!!