பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள்.
அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு. இந்த கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, 100 சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Read more: ஏமாற்றிய ஸ்டாலின்.. தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டத்தில் இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர்..!!