fbpx

பெரும் பதற்றம்..! பதுங்கியிருந்து ராணுவ வாகனம் மீது தாக்குதல்..! 5 ராணுவ வீரர்கள் பலி, 2 பேரின் உடல்கள் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு..!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டம் தனமண்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தனமண்டி – சூரன்கோட் சாலை சவ்னி பகுதியில் உள்ள ரஜோரி செக்டாரில் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். நேற்று மாலை முதல் அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை ராணுவத்தினர் வலுப்படுத்தி உள்ளனர்.

இரண்டு வாகனங்கள், ஒரு ஜிப்சி மற்றும் ஒரு மினி டிரக், சூரன்கோட்டில் உள்ள புஃப்லியாஸில் இருந்து ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு அமைந்துள்ள ரஜோரியில் உள்ள தனமண்டிக்கு சென்று கொண்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வாகனங்கள் டோபா பிர்க் பகுதிக்கு கீழே சென்றபோது, ஏற்கனவே, அங்கே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சுற்றிவளைக்கப்பட்டு வியாழக்கிழமை இரவு வரை தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. இந்த நடவடிக்கைக்காக சிறப்புப் படைகளின் குழு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஹெரான் யு.ஏ.வி-கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொல்லப்பட்ட வீரர்களில் இருவரின் உடல்கள் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 48 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பகுதியில் இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள ஆயுதமேந்திய போலீஸ் பிரிவு வளாகத்தில் நேற்று, வெடிவிபத்து நடந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சூரன்கோட் பகுதியில் டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kokila

Next Post

கோவிட் JN.1-இல் இருந்து தப்பிக்க இதுதான் வழி..!! மறக்காம பண்ணுங்க..!! உங்களை நெருங்காது..!!

Fri Dec 22 , 2023
கேரளா, மகாராஷ்டிராவில் புதிய கோவிட் மாறுபாடு JN.1 கண்டறியப்பட்ட பின் கொரோனா தொடர்பான கவலைகள் மீண்டும் எழுந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) JN.1 ஐ “குறைந்த அபாயத்தை ஏற்படுத்துவதாக வகைப்படுத்தி உள்ளது. இருமல், சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, லேசான மூச்சுத்திணறல் ஆகியவை புதிய வகை மாறுபாட்டின் அறிகுறிகள் ஆகும். உலகளவில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு மத்தியில், குறிப்பாக குளிர்காலத்தில் விழிப்புணர்வு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் முக்கியமானதாகிறது. […]

You May Like