fbpx

தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. அப்பாவி பொதுமக்கள் 32 பேர் பலி!. சோமாலியா கடற்கரையில் பயங்கரம்!

Somalia Beach: சோமாலியா கடற்கரையில் தற்கொலை படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 32 பேர் பலியாகினர்.

சோமாலியாவில் மொகடிஷூ நகரின் அப்டியாஜிஸ் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற லிடோ கடற்கரை உள்ளது. ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் லிடோ கடற்கரையையொட்டி உணவு மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் குழுமியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடற்கரையில் கூடியிருந்த மக்களை நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தினார்.

இதனால் பதற்றமடைந்த மக்கள் சிதறி ஓடினர். அப்போது அங்கு வந்த மேலும் 5 மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் 32 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அல்-கொய்தா அமைப்பின் பிரிவான அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

Readmore: இஸ்மாயில் ஹனியே படுகொலை : ஹமாஸின் அடுத்த அரசியல் தலைவர் யார்?

English Summary

Al-Shabaab Suicide Bomber, Gunmen Kill 32 In Busy Somalia Beach, Injure Scores

Kokila

Next Post

மேகவெடிப்பு!. 1,500 பக்தர்களின் நிலை என்ன?. கேதார்நாத் யாத்திரை சென்றபோது விபரீதம்!. முழு வீச்சில் மீட்புப் பணிகள்!

Sun Aug 4 , 2024
Cloudburst disaster! 1500 devotees are trapped and suffering! Tragedy when Kedarnath Yatra went! Rescue operations in full swing!

You May Like