பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிப்.14ஆம் தேதியன்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிபிசி அலுவலகத்தில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், வெளியிட்ட மோடி குறித்த ஆவணப்படம் தடை செய்யப்பட்ட நிலையில், சில இடங்களில் தடையை மீறி வெளியானதை அடுத்து தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.