fbpx

ஒரே ஊசியை கொண்டு பல நோயாளிகளுக்கு சோதனை!… சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதித்த அதிர்ச்சி!… உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் பல நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஒரே ஊசியை வைத்து மற்ற நோயாளிகளுக்கும் மருத்துவம் பார்த்ததால் சிறுமி ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ள் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதாக கூறி மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியையும் அவரது பெற்றோரையும் வலுக்கட்டாயமாக அங்கே இருந்து வெளியே தள்ளினர்.இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று எட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் திரு. அங்கித் குமார் அகர்வாலிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், பல சிறுவர்களுக்கு பயன்படுத்திய ஊசியை தங்கள் மகளுக்கு அநத மருத்துவர் செலுத்தியதாகவும், அதன் விளைவாக தங்கள் மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகவும் கூறினர். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் அவர்கள் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதி-யிடம் விரைந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இதுதொடர்பாக உத்தர பிரதேஷ் துணை முதலமைச்சர் திரு. பிரஜேஷ் பதக், “இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

இந்த அரிய 1 ரூபாய் நோட்டு இருந்தால் ஜாக்பாட்.. ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

Mon Mar 6 , 2023
தற்போது பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் நல்ல தொகைக்கு விற்கப்படுகின்றன.. மேலும் பலர் அரிதான பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவழிக்க தயாராக உள்ளனர். அந்த வகையில், இந்த அரிய 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், வீட்டில் இருந்தபடியே 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த குறிப்பிட்ட 1 ரூபாய் நோட்டின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு […]

You May Like