Thaipusam: தைப்பூச திருநாளானது தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த திருநாளில் பக்தர்கள் முருக பெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். பிப்ரவரி 11ஆம் தேதி இன்று தைப்பூசம் என கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து முருகனை வழிப்படுவர். மார்கழி மாதம் தொடங்கும் இந்த விரதமானது தைப்பூசம் வரை நீடிக்கும்.
தைப்பூச நாளில்தான் இந்த உலகத்தில் முதல்முறையாக நீர் தோன்றியதாகவும், அதிலிருந்துதான் பூஞ்சை, புல், கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் தோன்றியதாக முன்னே முன்னோர்கள் எழுதிவைத்த புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. அதேபோல், தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமாக வழங்கினார். இதன்மூலம்தான் தந்தைக்கு பாடம் சொன்ன முருகன் என்ற பெயர் வந்தது.
முருகன் தனது தாயான பராசக்தியிடம் வேல் வாங்கி நின்ற தினம் இன்றுதான். மேலும், அகத்தியருக்கு முருக பெருமான் தமிழை கற்பித்ததும், சிதம்பரம் நடராஜர், பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு காட்சி கொடுத்ததும் இதே தைப்பூச நாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருக பெருமானை வழிபடுவதால் நம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். குழந்தை ஆயுள், திருமண யோகம், குடும்ப ஒற்றுமை என அனைத்தும் கைக்கூடும் என்பது நம்பிக்கை.
அறுபடை வீட்டின் முதல் படை வீடு, மதுரையில் உள்ள திருப்பரங்குன்றமாகும். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, திருப்பரங்குன்றம் கோவிலில் தான் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்தார். இது சுக்ரன் பலன் நிரந்த தலமாகும். முருகன் தெய்வானை திருக்கல்யாணத்தை தரிசித்தால் திருமண தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு, கடல் மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள திருச்செந்தூர் ஆகும். அசுரன் சூரபத்மனை வதம் செய்த சூரசம்ஹாரம் நிகழ்ந்த இடம். மகா கந்த சஷ்டி மிகவும் கோலாகலமாக நடைபெறும். கடற்கரையோரம் இருக்கும் ஒரே ஒரு படை வீடு திருச்செந்தூர். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகவும் இருப்பதால், ஜாதகத்தில் குரு தோஷம் நீங்கவும், குரு பெயர்ச்சி பரிகார கோவிலாகவும் உள்ளது.
அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடான பழனி மலையில் அருள் பாலிக்கு ம் முருகன், ஞான ஸ்கந்தனாக, ஞானத்தை அளிக்கும் இறைவனாகக் காட்சியளிக்கிறார். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழனி, பழனி முருகனின் சிலை நவபாஷானத்தில் செய்யப்பட்டுள்ளது. தந்தையிடம் கோபித்துக் கொண்டு முருகன் வந்தமர்ந்த மலை தான் பழனி. பழனி, பாவங்கள் போக்கும், ஞானத்தை அருளும் படை வீடாக கருதப்படுகிறது. முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டாலும், ஆண்டிக் கோலம் முதல் ராஜ அலங்கார கோலம் வரை காட்சியளிக்கும் பழனியில் தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் உற்சவமாக கொண்டாடப்படும். பாதயாத்திரை ஆக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழாவிற்கு பயணிக்கு சென்று முருகரை தரிசிப்பார்கள்.
அறுபடை வீட்டில், நான்காவது படை வீடு, சுவாமிமலை ஆகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்று சுவாமிமலை முருகனை அழைப்பதுண்டு. தனது மகனின் வாயால், பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்ன என்று கேட்க விரும்பி, மகனையே குருவாக சிவபெருமான் ஏற்று, தந்தைக்கு மகன் உபதேசம் செய்த திருத்தலம் தான் சுவாமிமலை. சுவாமிமலை முருகனை தரிசித்தால் அறிவாற்றல் பெருகும்.
தணிகை மலை என்று அழைக்கப்படும் திருத்தணி, முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். சூரபத்மனை வதம் செய்த பிறகு, தனது கோபத்தை தணிக்க, முருகன் வந்தமர்ந்த இடம் தான் திருத்தணி. முருகனின் சினம் தணிந்த இடம் என்பதால், திருத்தணிகை என்று அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் தான் வள்ளியை திருமணம் செய்தார். சினம் தணிந்த முருகன் கேட்கும் வரம் தருவார்!
அறுபடை வீடுகளில், ஆறாவது வீடு தான் சோலை மலை அன்று அழைக்கப்படும் பழமுதிர்சோலை. ஒவ்வை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா என்று முருகன் திருவிளையாடல் நடத்திய இடம் இது. கல்வி அறிவு மட்டும் போதாது, இறையருளும் அவசியம் என்பதை உணர்த்திய இடம்.
Readmore: இன்று தைப்பூசம்.. முருகனை காண வரும் பக்தர்கள் காவடி எடுப்பது ஏன் தெரியுமா..? சுவாரஸ்ய வரலாறு இதோ..