சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
கடந்த 22ம் தேதி தொடங்கிய 18வது சீசன் ஐபிஎல் கிர்க்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில், இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் நடக்கும் ஐந்தாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி பங்குபெறும் போட்டிகள், மக்கள் மத்தியல் மிகவும் கவனம் பெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி மும்பை அணியை எதிர்கொண்ட சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.
அதேபோல் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணியும் வெற்றி பெற்றது. இதனால் வரும் 28ஆம் தேதி சென்னை பெங்களூரு அணிகள் மோதும் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிக ரசிகர்களை கொண்டுள்ள தோனியும், விராட் கோலியும் களத்தில் விளையாடவுள்ளதால் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினார். சென்னையில் நடக்கும் இரண்டாவது போட்டி இதுவாகும்.
இந்த இரு அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.chennaisuperkings.com-ல் ஆன்லைனில் விற்பனை தொடங்கியது. மைதானத்தில் அமரும் இடத்திற்கு ஏற்றவாறு, ரூ.1700, ரூ.2500, ரூ.3500, ரூ.4000, ரூ.7500 என 5 வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
38,000 இருக்கைகள் கொண்ட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய, இரன்டு லட்சத்திற்கு அதிகாமானோர் online queuல் காத்திருந்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் விதத்தில், தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.