fbpx

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்கவுள்ள தல தோனி!… ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர் என்ற பெருமை!

இன்றைய இறுதிப் போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் வீரர் என்ற புதிய சாதனையை எம்.எஸ்.தோனி படைக்கவுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றுமாலை 7.30 மணியளவில் தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை 10 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி ஒரு சாதனையை படைத்துள்ளது. மறுபக்கம், விளையாடிய இரண்டு சீசனில் ஒரு பட்டத்தையும் வென்று, தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குஜராத் அணி.நாளைய இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் பெரும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக மோதும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி. அதாவது, குஜராத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார் எம்எஸ் தோனி. CSK-ஐ ஐந்து முறை சாம்பியனாக்குவதன் மூலம் இந்த தருணத்தை அவரால் சிறப்பாக்க முடியும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி 15 போட்டிகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால்,185.71 என்ற வியக்கத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டுடன் 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த ஆண்டு சிஎஸ்கேயின் ஃபினிஷராக இருந்துள்ளார். எனவே, புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி இன்று வரலாற்றில் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கோப்பையை வென்றால் சிஎஸ்கே சிங்கங்கள் படைக்கப்போகும் மிரட்டலான சாதனைகள்!... என்னென்ன தெரியுமா?

Sun May 28 , 2023
ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றால் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைக்கப்போகும் சாதனைகள் பட்டியல் குறித்து பார்ப்போம். ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகும். இதற்கு அடுத்தப்படியாக பலம் வாய்ந்த அணி என்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் நிரூபித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்று […]

You May Like