fbpx

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுக்க தல தோனி போட்ட மாஸ்டர் பிளான்!… வைரலாகும் வீடியோ!

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுக்க தல தோனி, பீல்டரை ஆஃப்-சைடுக்கு நகர்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. முடிவில் குஜராத் அணி, சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. இதில் தற்போது குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுப்பதற்காக தோனி அமைத்த பில்டிங் வியூகம் குறித்து ரசிகர்கள் பெரிதும் பேசி வருகின்றனர். அதாவது ஹர்திக் பாண்டியா விளையாடிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ஆப்சைடு திசையில் ஒரு பீல்டரை வைத்தார். இதன்படி தீக்ஷனா வீசிய அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியா, கேட்ச் கொடுத்து விக்கட்டை இழந்தார், இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

என்ன பத்தி இன்னுமா நீங்க தெரிஞ்சுக்கல!... சிஎஸ்கே ரசிகர்களை ட்ரோல் செய்த ஜடேஜா!... என்ன காரணம் தெரியுமா?

Thu May 25 , 2023
தன்னை அவுட் ஆகும்படி கூறிய ரசிகர்களுக்கு, சென்னை-குஜராத் இடையேயான போட்டியில் மதிப்புமிக்க வீரர் விருது வாங்கி ஜடேஜா பதிலடி ட்வீட் செய்துள்ளார். ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் […]

You May Like