fbpx

தலையா?… தளபதியா?… மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய்!… 20 வருசத்திற்கு முன்னாடியே இதை செய்த அஜித்!

விஜய் மாணவர்களுக்கு உதவியதை அடுத்து அஜித் என்ன செய்தார் என சில ரசிகர்கள் அஜித்தின் ரசிகர்களை கேட்டு வருகின்றனர். இது தற்போது சமூகத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். அந்த விஷயம் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது. பத்தாம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கிட்டத்தட்ட 1500 பேரை அழைத்து விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் 12 மணி நேரத்திற்கு மேலாக மேடையில் நின்றுகொண்டு அவர்களுடன் சிரித்து பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் விஜய். இந்த செயலை அடுத்து ரசிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் விஜய்யை பாராட்டி வருகின்றனர்.

விஜய் பொது தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க இருப்பதாக தன் மக்கள் இயக்கம் சார்பாக அறிவித்தார். இதையடுத்து கடந்த ஒரு மாதமாக தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்தார் விஜய். அவர்களும் விஜய்யின் ஆலோசனையின் படி ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். என்னதான் லியோ படப்பிடிப்பில் விஜய் பிசியாக இருந்தாலும் பக்காவாக பிளான் போட்டு இந்த விழாவை நடத்தி முடித்துள்ளார்.

விஜய் இவ்வாறு சமீபகாலமாக தன் மக்கள் இயக்கம் சார்பாக பல நல்ல காரியங்களை செய்து வருகின்றார். இதையடுத்து ரசிகர்கள் அவரை நினைத்து பெருமைப்பட்டு வருகின்றனர். கல்வி தான் முக்கியம் என்பதை விஜய் இதன் மூலம் எடுத்து கூறுகின்றார் என்றும், இதைப்பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் பெரும் எண்ணம் வரும் என்றும் தங்கள் கருத்துக்களை கூறி விஜய்யை பாராட்டி வருகின்றனர். ஆனால் சிலரோ அஜித் ரசிகர்களை சீண்டியும் வருகின்றனர். விஜய் மாணவர்களுக்கு உதவியதை அடுத்து அஜித் என்ன செய்தார் என சில ரசிகர்கள் அஜித்தின் ரசிகர்களை கேட்டு வருகின்றனர். இது தற்போது சமூகத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது அஜித் பள்ளி மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. என்னவென்றால், அஜித் கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் பசுமை புரட்சியாக மரக்கன்றுகளையும் நாட்டார் அஜித். எனவே இந்த புகைப்படத்தை பகிர்ந்து அஜித்தின் ரசிகர்கள், தளபதி இன்று செய்ததை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே அஜித் செய்துவிட்டார் என சுட்டிக்காட்டி வருகின்றனர். தற்போது பலரும் பார்த்திடாத இந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. மேலும் இதன் காரணமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சிலருக்கு இடையே மோதலும் வெடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க வந்துவிட்டது புதிய வசதி!... முதன்முறையாக மாநகரில் தொடக்கம்!... சிறப்புகள் இதோ!

Wed Jun 21 , 2023
சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாறிவரும் நவீன காலத்திற்கேற்ப மக்களிடையே போக்குவரத்துகள் அதிகமாகிவிட்டது. அதேபோல், வாகனங்களின் எண்ணிக்கையும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நெரிசலை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவலர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஒரு திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். […]

You May Like