fbpx

தளபதி 67 அப்டேட்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தளபதி 67 குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் தற்போது மீண்டும் விஜய்யுடன் கை கோர்த்துள்ளார்.. தற்காலிகமாக ‘ தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க உள்ளார்..

லோகேஷ் கனகராஜின் LCU-வில் இணைகிறார் பொன்னியின் செல்வன் நடிகர்..!! அவரே சொன்ன முக்கிய தகவல்..!!

இது தான் சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.. இவர்கள் தவிர கமல்ஹாசன், அர்ஜுன், விக்ரம், மிஷ்கின், கௌதம் மேனன், நிவின் பாலி, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது..

லோகேஷ் சினிமேட்டிக் யுனிவெர்ஸின் ஒரு பகுதியாக இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.. குறிப்பாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பத்திரத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. அதே போல் தளபதி 67 படத்தில் நடிகர் விக்ரம், சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..

இந்நிலையில் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.. அதன்படி, தளபதி 67 படத்தை செவன் ஸ்கீரின் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் 3-வது முறை இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று அழைக்கப்படும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2-ம் தேதி தொடங்கியதாகவும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து தளபதி 67 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.. மேலும் படத்தின் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த புரோமோ வீடியோ வரும் 3-ம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் டைட்டிலும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

கொடூரமான முறையில் கடன் தொல்லை.! - மைனர் சிறுமியை கற்பழித்த முதியவர்.!

Mon Jan 30 , 2023
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் குருத் கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அந்த கிராமத்தில் இருக்கும் 60 வயது முதியவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறித்த நேரத்தில் அவரால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனை காரணமாக வைத்து கடனை திரும்ப கேட்க […]
’சிறுமியின் உள்ளாடையை கழற்ற சொல்வதும் கற்பழிப்புக்கு சமம் தான்’..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like