தளபதி விஜய் அரசியலை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. அவரது ரசிகர்கள் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவரது அரசியல் நகர்வுகள் ஆரம்பமானது. சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கியது மற்றும் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கிய கௌரவித்தது என அவரது அரசியல் நகர்வுகள் புயல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
இதன் மற்றொரு பகுதியாக தளபதி விஜயின் நூலகம் தமிழகத்தில் இன்று இரண்டு இடங்களில் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நூலகங்களையும் விஜய் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் இந்த நிகழ்வு பற்றி செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் புத்தகம் படிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்ததாகவும் கூறியிருக்கிறார்.
தளபதி விஜயின் நூலகத்தில் பெரியார் காமராஜர் அம்பேத்கர் மற்றும் தேசத் தந்தை மகாத்மா காந்தி ஆகியோரின் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நூலகங்கள் முதலில் தாம்பரத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும் இன்னும் தமிழகத்தின் பிற இடங்களிலும் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிகிறது.