தஞ்சை அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் காலமானார். அவருக்கு வயது 53.
தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். 1985ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 2001 முதல் தொடர்ந்து 3 முறை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல் முறை போட்டியிட்டதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பனியாற்றினார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.