fbpx

’அந்த மனசு இருக்கே’..!! தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் கேரளா..!! என்னென்ன தெரியுமா..?

கடந்த வாரம் பெய்த அதி கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடும் வெள்ள சேதத்தை சந்தித்துள்ளது. மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இரண்டு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவும் தமிழகத்திற்கு உதவி செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், ”தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரளா தயாராகி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கிட் வடிவில் உதவிகளை வழங்குவதற்கு இது உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அரிசி – 5 கிலோ, துவரம் பருப்பு, உப்பு, சர்க்கரை, கோதுமை தலா 1 கிலோ, ரவை – 500 கிராம், மிளகாய்த் தூள் – 300 கிராம், சாம்பார் தூள் – 200 கிராம், மஞ்சள் தூள், ரசம் பொடி, ரசப்பொடி தலா 100 கிராம், சோப்பு, பற்பசை, சீப்பு, லுங்கி, நைட்டி தலா ஒன்று, பல் துலக்குதல் – 4, சூரியகாந்தி எண்ணெய் – 1 லிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை திருவனந்தபுரம் கனகக்குன் அரண்மனை எதிரே உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இம்முயற்சியில் அனைவரும் கலந்து கொண்டு சக மனிதர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மக்களே உஷார்… நீங்க வாங்கும் இந்த 64 மருந்துகள் தரமற்றவை!… மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!

Sat Dec 23 , 2023
மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சந்தையில் உள்ள, 64 மருந்துகள், தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள், மாதந்தோறும் ஆய்வு செய்து வருகின்றன. அப்போது, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மாதத்தில், 1,197 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், கிருமி தொற்று, ஜீரண மண்டல […]

You May Like