fbpx

’இந்த முறையும் அந்த தவறு நடக்கக் கூடாது’..!! மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!

கனமழை முன்னெச்சரிக்கையை தொடர்ந்து 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அண்டை மாநில கனமழை, நிலச்சரிவு பாதிப்புகளை அடுத்து, தமிழ்நாட்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழக்கத்தை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு டிசம்பரில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அதேநிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று ரிப்பன் மாளிகையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு , தங்கம் தென்னரசு உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அடுத்து, 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழையை எதிர்கொள்ளப் பேரிடர் துறை, வருவாய்த்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More : அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! ஊதிய உயர்வு, இழப்பீடு தொகை உயர்வு..!! வெளியான சூப்பர் அறிவிப்புகள்..!!

English Summary

It is said that the disaster department has ordered pre-planned precautionary measures by the revenue department to face heavy rains in 22 districts.

Chella

Next Post

ரூம் போட்டு உல்லாசம்..!! திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை..!! கடைசியில் நடந்த சோகம்..!!

Sat Aug 17 , 2024
The incident of burying the child in a plastic cover when the child was born before marriage has caused shock.

You May Like