பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டை, சமாதானம், போட்டி, பொறாமையை தாண்டி காதல் ஜோடிகள் உருவாகி விட்டன. இனி வரும் நாட்களில்காதல் புறாக்களின் லீலைகளையும் பார்க்க கூடியதாக இருக்கும். அது ஒரு புறம் இருக்க இன்றைய நாள் ப்ரோமோ விறுவிறுப்பாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது அசைஞ்சா போச்சி என்ற தலைப்பில் போட்டியை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதாவது மணி பொருத்தப்பட்ட ஹெட் கியர் தரப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு போட்டியாளர்கள் தலையிலும் கட்டப்பட்டிருக்கும். அது ஒளிக்காமல் பீரிஸ் ஆவதுதான் டாக்ஸ்.
பிரதீப்பை குழப்புவதற்காக கூல் சுரேஷ் வரும் போது நான் நேர்மையாக விளையாடிக்கொண்டு இருக்கிறேன் குழப்பாமல் போய்விடு என்று கூறுகிறார். அதன் பிறகு பிக்பாஸ் யார் தலையில் உள்ள மணி ஆடுபட்டது என கேட்க்கும் போது பிரதீப்பின் பெயரும் சொல்லப்பட்டது. அப்போது, பிரதீப் தகாத வார்த்தையில் பேசி விடுகிறார்.
இதனால் கோபமடைந்த கூல் சுரேஷ் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என கூறி தனது உடைகளை எடுத்துக்கொண்டு வெளியில் செல்கிறார். அத்தோடு பிக்பாஸ் ப்ரோமோ முடிவடைகிறது. இனி என்ன நடைபெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.