ரேஷன் கார்டு என்பது தற்போது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவி, நிவாரணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதால், நாட்டில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வ்ருகின்றனர்.
குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலோ அல்லது பெண்கள் திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றாலோ ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகிறது. அதேபோல், திருமணமாகி ஒரு வீட்டிற்கு பெண் வரும்போது அவரது பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்படுகிறது. முன்னதாக, இதற்கெல்லாம் நேரடியாக அலுவலகத்தில் செல்ல நேரிட்டது. ஆனால், தற்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமே பெயரை இணைத்துக் கொள்ள முடியும். மேலும், ஒருவருக்கு குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் ஈசியாக இணைத்துக் கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயரை சேர்ப்பது எப்படி..?
➣ முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
➣ பின்னர், “பயனாளர் நுழைவு” என்பதை கொடுத்து உள்நுழைய வேண்டும்.
➣ அதில், ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரை உள்ளிட வேண்டும். பின்னர், கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து “பதிவு செய்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
➣ தற்போது, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். பின்னர், OTP-ஐ என்டர் செய்து உள்நுழைய வேண்டும்.
➣ பின்னர், குடும்பத்தில் உள்ள நபர்கள், குடும்ப அட்டை எண், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
➣ அதில், “மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்” என்று இருக்கும். அதில், “உறுப்பினரை சேர்க்க” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
➣ ஒரு பெண் திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றிருந்தால், அவருடைய பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும்.
➣ அதேபோல், ஒரு பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு வரும்போது, ரேஷன் கார்டில் அவரது பெயரை சேர்க்க வேண்டும்.
➣ பின்னர் 1 முதல் 3 நாட்களில் ரேஷன் கார்டில் நீங்கள் கொடுத்த பெயர் சேர்க்கப்படும். இதனை நீங்கள் ஆன்லைன் மூலமே சரிபார்த்துக் கொள்ள முடியும்.