ஐபிஎல் தொடரில் 5ஆவது முறையாக வென்ற சாம்பியன் டிராபியை அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜாவை பெற்றுக் கொள்ளும்படி தல தோனி கூறினார்.
2023ம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், விருத்திமான் சகா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீ ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது. இதில், டெவான் கான்வே 47 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஜிங்கியா ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராயுடுவும் 19 ரன்களில் வெளியேற, தோனி களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜடேஜா களமிறங்கினார். அப்போது அவருக்கு தெரியாது நாம் தான் வெற்றி தேடி தரப்போகிறோம் என்று. இறுதியாக கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுத்து ஜடேஜா, சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
இதையடுத்து சாம்பியன் டிராபி பெற்றுக் கொள்ள தோனி அழைக்கப்பட்டார். ஆனால், அவர் அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அழைத்து ஐபிஎல் சாம்பியன் டிராபியை பெற்றுக் கொள்ளும்படி கூறினார். இதன் காரணமாக அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து ஐபிஎல் டிராபியை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.