அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வருகிறது. முதற்கட்டமாக விஜய், பொதுக்கூட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக மாவட்ட வாரியாக செயலாளர்கள் உள்பட பல்வேறு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். மேலும், பனையூர் கட்சி அலுவலகத்தில் அவ்வப்போது, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களம் காணவுள்ள நிலையில், விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் தனது தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என கட்சி நிர்வாகிகளிடையே கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், தவெகவின் பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
— TVK Party Updates (@TVKHQUpdates) March 14, 2025
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, கழகப் பொதுக்குழ உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் அப் மற்றும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Read More : செம குட் நியூஸ்..!! செல்போன், டிவிக்களின் விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!