திருவள்ளூரில் கட்டப்பட்டிருந்த தவெகவின் இளைஞரணி அலுவலக கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
நாம் நாட்டின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆக்கிரமிப்புகளே காரணமாக உள்ளது. பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் திருவள்ளூர் நகரில் கடந்த சில காலமாகவே போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இதனை சரிசெய்வதற்காக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட அலுவலகம் பத்தியால்பேட்டை என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால், நெடுஞ்சாலைத்துறை இடித்து அகற்றியது.
இந்த அலுவலகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து, சம்பவ இடத்தில் தவெகவினர் கூடியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முதல் கட்சியாக இணைந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக்
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை தலைமை ஏற்கும் கட்சி உடன் கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான், முதல் கட்சியாகத் தமிழக முஸ்லிம் லீக் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இஸ்லாமியர்களை திமுக தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும், பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் தவெகவில் பதவி கொடுத்திருப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதாகத் தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார்.