fbpx

தவெக கட்சிக் கொடி ரெடி..!! மாநாட்டிற்கு இடமும் ரெடி..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!! விஜய்யே சொல்லிட்டாராம்..!!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் வரை, கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வராது என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் மாநாட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்த உள்ளதால், லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : சைவ பிரியர்களே இதை நோட் பண்ணிக்கோங்க..!! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

English Summary

It has been reported that 3 flags have been designed and ready for Vijay’s Tamil Nadu Victory Kazhagam party.

Chella

Next Post

இந்தியாவில் பரிசுத் தொகை வென்றால் வரி எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!!

Fri Aug 9 , 2024
Lucky winners who win lottery or prize money in India also have to pay tax. Let's see what tax rate they have to pay.

You May Like