நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடந்த்தி வருகிறார். இக்கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் வாகை மலர் இடம்பெறவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வாகை என்றால் வெற்றி என்று அர்த்தம். அதன் அடிப்படையில், கட்சி கொடியில் இந்த மலர் இடம்பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சிக் கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெறவுள்ளதாம். இது குறித்த தகவல் வெளியாகி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வாகை மரம் தென்காசியாவை பூர்விகமாகக் கொண்டது. இந்த மரம் வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டில் காணப்படும் பழமையான மரங்களில் இதுவும் ஒன்றாகும். சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டதாக இலக்கிய குறிப்புகளும் உள்ளன. அது மட்டுமின்றி இலை, பூ, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது.
Read More : போலீசாருக்கு காவல் ஆணையர் வார்னிங்..!! பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!