fbpx

புதிய சின்னத்தை களமிறக்கிய தவெக..? உதய சூரியனுக்கு போட்டியா..? வைரலாகும் புகைப்படம்..!!

சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்து ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன்படி, அக்கட்சியில் கொடியும், கொடிப்பாடலும் வெளியானது. இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார் விஜய். கட்சியைத் தொடங்கி, மாநாட்டில் சிக்சர் அடித்து, அடுத்த தேர்தலுக்குள் தன் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் திட்டமிருக்கும் நிலையில், விரைவில் தமிழ்நாடு முழுவதும் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே, கட்சியின் தவெகவின் செயல்பாடுகள் அடுத்து என்ன என கணிக்க முடியாதபடி விஜய் பலவற்றை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சின்னத்திற்கு போட்டியாக ஒரு புதிய சின்னத்தை வைக்க தமிழக வெற்றி கழகத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தச் சின்னம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியானது, சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் உள்ளது. கொடியின் நடுவில் 2 ஆண் யானைகள் இடம்பெற்றுள்ளன.

கொடியின் நடுவில் உள்ள சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலர் மற்றும் 28 நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கட்சிக் கொடியின் நிறத்தில் சூரியனின் மஞ்சள் நிறத்தோடு இரு கைகள் உள்ளவாறு நடுவில் வரைபடத்தோடு அந்த முத்திரை உள்ளது. மேலும், உதயசூரியன் சின்னத்திற்கு போட்டியாக தவெக புதிய சின்னத்தை களமிறக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Read More : மணிப்பூருக்கு மேலும் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும் மத்திய அரசு..!! இதுவரை 258 பேர் உயிரிழப்பு..!!

English Summary

The symbol of the DMK is the rising sun. It is said that the Tamil Nadu Victory Party has decided to come up with a new symbol to compete with this symbol.

Chella

Next Post

7 நகரங்களில் வீடுகளின் விலை ஜெட் வேகத்தில் உயர்வு…! அதுவும் இத்தனை கோடியா? சென்னையும் லிஸ்ட்ல இருக்கு..

Sat Nov 23 , 2024
Home prices rise at jet speed in 7 cities...! Is that too many crores? Chennai is also in the list..

You May Like